ஆப்நகரம்

இந்திய ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது!?

ரயில்வே துறைக்கு என்று தனியே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை இந்த ஆண்டுடன் முடித்து கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

TOI Contributor 13 Aug 2016, 2:30 pm
ரயில்வே துறைக்கு என்று தனியே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை இந்த ஆண்டுடன் முடித்து கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil no separate budget for indian railways
இந்திய ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது!?


ஒவ்வொரு வருடமும் பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் என மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. 1924-ஆம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் முறை வழக்கத்தில் இருந்து வரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இருவர் அடங்கிய கமிட்டி ஒன்றை நியமித்தது. தற்போது இருவர் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் ரயில்வேக்கு என்று தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறைக்கு முடிவு கட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்து பேசியிருப்பதாக தெரிவித்திருந்தார். அவ்வாறு இணைப்படும் பட்சத்தில் அரசு துறைகளைப்போல், ரயில்வே துறைக்கும் நிதிதுறையில் இருந்து நேரடியாக நிதிகிடைக்கும். அரசுக்கு அதிக செலவு ஏற்படுவதால் அதனை குறைக்கும் நோக்கில் இரண்டு பட்ஜெட்டையும் இணைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி