ஆப்நகரம்

நடிகரின் மரணத்துக்கு கவலைப்படுபவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கு வருந்துவதில்லை: சரத் பவார் கவலை!

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பேசுபவர்கள் விவசாயிகளின் தற்கொலை தொடர்பாக பேசுவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கவலை தெரிவித்துள்ளார்

Samayam Tamil 12 Aug 2020, 8:29 pm
முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் புகழ் பெற்ற சுஷாந்த் சிங்கின் தற்கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சரத் பவார்
சரத் பவார்


இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், சுஷாந்தின் சகோதரிகள், அவரது காதலி ரியா மற்றும் சில திரைப்பிரபலங்கள் என மொத்தம் 56 பேரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளது. இதனிடையே, சுஷாந்தின் காதலி ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பீகார் மாநில காவல்துறையிடம் சுஷாந்தின் தந்தை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சுஷாந்தை தற்கொலைக்கு துாண்டியதாக ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்ரபோர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, மும்பைக்கு மாற்ற இயலாது என திட்டவட்டமாக தெரிவித்ததுடன், ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

12ஆம் வகுப்பினருக்கு இலவச ஸ்மார்ட் போன்- முதல்வர் தொடக்கி வைத்தார்!

இந்த நிலையில், “பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால் அது பற்றி அதிகம் விவாதிக்கப்பட தேவையில்லை” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கவலை தெரிவித்துள்ளார். மேலும், “சுஷாந்த் சிங் விவகாரம் அவ்வளவு பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. விவசாயிகள் சுமார் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யாரும் அதைப்பற்றி பேசவில்லை என்று விவசாயி ஒருவரே என்னிடம் தெரிவித்தார்” என்றும் சரத் பவார் கூறியுள்ளார்.


மகாராஷ்டிரா போலீசாரை 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. போலீசார் மீது மற்றவர்கள் குற்றம் சாட்டியதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சுஷாந்த் சிங்கின் வழக்கை சிபிஐ விசாரிகக் வேண்டும் என யாரேனும் கோரினால் அதற்கு நான் மறுப்பு தெரிவிக்க மாட்டேன் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார். மேலும், சுஷாந்த் மரணாம் தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதால் அதுகுறித்து மேலதிக கருத்துக்களை தெரிவிக்கவும் சரத் பவார் மறுப்பு தெரிவித்து விட்டார்.

முன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விவசாயத்துறை அமைச்சராக சரத் பவார் பதவி வகித்து வந்தார். அப்போது, விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால், அவர் ஜாலியாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொடர் பார்த்து வந்ததாக எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி