ஆப்நகரம்

தீவிரவாதிகளை முடக்கிய ரூபாய் சீர்திருத்தம்: ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் நக்சலைட்கள் மற்றும் இதர தீவிரவாதச் செயல்பாடுகளை முடக்க, ரூபாய் சீர்திருத்தம் பெரிதும் உதவியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

TNN 20 Dec 2016, 10:42 pm
நாடு முழுவதும் நக்சலைட்கள் மற்றும் இதர தீவிரவாதச் செயல்பாடுகளை முடக்க, ரூபாய் சீர்திருத்தம் பெரிதும் உதவியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil note ban has helped in checking terrorism naxalism rajnath singh
தீவிரவாதிகளை முடக்கிய ரூபாய் சீர்திருத்தம்: ராஜ்நாத் சிங்


மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ரூபாய் சீர்திருத்தம் தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி பெரும் அமளி நிலவுகிறது. இத்தகைய சூழலில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவித்ததன் காரணமாக, நாட்டில் தீவிரவாதத்தை வெகுவாக முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

நக்சலைட்கள் உள்பட அனைத்து தீவிரவாதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இதுபற்றி பேச நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. அவர்கள் பிரச்னை செய்யவே நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர். இதனாலேயே மக்கள் மேடைகளில், ரூபாய் சீர்திருத்தம் பற்றி நாங்கள் பேசிவருகிறோம்.

நாட்டில் உள்ள ஏழைகள், பணக்காரர்கள் அனைவருமே சமம். அதனையே தற்போதைய ரூபாய் சீர்திருத்தம் நிரூபித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தில் உள்ள நன்மையை பேசவிடாமல் மக்களிடையே பொய் பிரசாரம் செய்கின்றன.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Justifying demonetisation as a step taken for the betterment of the country, Union Home Minister Rajnath Singh today said it has helped in checking terrorism and naxalism.

அடுத்த செய்தி