ஆப்நகரம்

உ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்!!

செவிவியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக, கொரோனா நோயாளிகள் ஆறு பேர் மீது. உத்தரப் பிரதேச மாநில போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்,

Samayam Tamil 3 Apr 2020, 4:30 pm
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Samayam Tamil upcm


அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஆறு பேர், காஜியாபாத்தில் உள்ள எம்எம்ஜி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாராவிக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்; ஷாக் மூடில் லட்சக்கணக்கான மக்கள்!

இந்த நிலையில், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் ஆறு பேரும், வியாழக்கிழமை இரவு திடீரென தங்களின் ஆடைகளை களைந்துவிட்டு, திறந்தமேனியில் வார்டை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் செவிலியர்களை பார்த்து தவறான செய்கைகளை அவர்கள் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர்கள் ஆறு பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, " தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைக்கு இன்று ஆளாகியுள்ளவர்கள், மருத்துவர்களின் அறிவுறுத்தல்களையும் ஏற்பதில்லை; சட்டத்தையும் மதிப்பதில்லை. மருத்துவ பணியாளர்களிடம் இவர் அநாகரிமாக நடந்து கொண்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

டார்ச் அடிச்சா என்ன நடக்கும்... சோதனை எலிகளா நாம்? - ஒரு பார்வை

மனித குலத்துக்கே எதிரான இவர்களை போன்ற நபர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்துவதை தவிர, அரசுக்கு வேறு இல்லை. ஏனெனில் இவர்கள் மீது இரக்கம் காட்ட அரசால் இயலவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத்தில், கொரோனா நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் அண்மையில் தாக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற விரும்பதகாத செயல்கள் நாட்டின் வேறெந்த பகுதியிலும் நடைபெறாமல் இருக்க, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகும்" என்று யோகி ஆதித்யாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி