ஆப்நகரம்

நீர் கசிவால் குஜராத் அணுமின் நிலையம் தற்காலிக மூடல்

குஜராத் மாநிலம் காக்ராப்பர் அணுமின் நிலையம் குளிர்விப்பானில் ஏற்பட்ட கசிவு காரணமாக அந்த அனுமின் நிலைய முதல் அலகு தற்காலிகமாக மூடப்பட்டது.

TOI Contributor 11 Mar 2016, 7:40 pm
அகமதாபாத்: குஜராத் மாநிலம் காக்ராப்பர் அணுமின் நிலையம் குளிர்விப்பானில் ஏற்பட்ட கசிவு காரணமாக அந்த அனுமின் நிலைய முதல் அலகு தற்காலிகமாக மூடப்பட்டது.
Samayam Tamil nuclear power plant in gujarat shut down following water leakage
நீர் கசிவால் குஜராத் அணுமின் நிலையம் தற்காலிக மூடல்


குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ளது காக்ராப்பர் அணுமின் நிலையம். இந்த அணுமின் நிலையம் மூலம் சுமார் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அணுமின் நிலைய முதல் அலகில் உள்ள குளிர்விப்பானில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டது. இதனால் முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அணிமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏதும் நிகழவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது என சூரத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புகுஷிமா அணு பேரழிவின் 5-வது ஆண்டு தினத்தை ஜப்பான் இன்று அனுசரித்து வரும் நிலையில், குஜராத் அணு மின் நிலையத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி