ஆப்நகரம்

ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பினராயி விஜயன்

ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

TNN 3 Dec 2017, 4:30 am
ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ockhi cyclone should be declared as national disaster pinarayi vijayan
ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பினராயி விஜயன்


கன்னியாகுமரி அருகில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியது. இதையடுத்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒகி புயலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில், ஒகி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றதால், கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் ஒகி புயலுக்குள் சிக்கிய 300க்கும் அதிகமான மீனவர்வர்களை தேடும் பணி திவீரமாக நடந்து வருகிறது.

ஒகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒகி புயலால், கேரளாவின் பல பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தயாரித்து வருகிறார். இதனை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இதனைக் கொண்டு ஒகி புயலால் கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், ஏறகனவே ஒகி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் உரிய நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று பினராயி விஜயன் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி