ஆப்நகரம்

JEE NEET தேர்வு சர்ச்சை - பிரதமருக்கு அவசரமாக ஃபோன் போட்ட முதலமைச்சர்!

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Aug 2020, 1:42 pm
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் நடத்த தேசிய தேர்வுகள் முகமை(NTA) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தேர்வுகள் நடத்துவது சரியல்ல என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. அதில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு தரப்பும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு எழுத 50 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
Samayam Tamil NEET Exams


இதேபோல் ஜேஇஇ தேர்வு எழுத 40 ஆயிரம் மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஒடிசாவில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் தொடர் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

ஜேஇஇ, நீட் தேர்வை தாராளமா நடத்துங்க; மோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கல்வியாளர்கள்!

பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேசியுள்ளார். அப்போது, தங்கள் மாநிலத்தில் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளக் கூடிய சூழலில் ஒடிசா இல்லை.

இதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களால் தேர்வுகளுக்கு தயாராக முடியாத சூழல் நிலவுகிறது. எனவே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் -க்கு நவீன் பட்நாயக் கடிதம் எழுதியிருந்தார்.

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு; முழு ஊரடங்கு தேதிகளும் வெளியீடு!

அதில், ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதுவதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி