ஆப்நகரம்

திருமணம் செஞ்சிகிட்டா இரண்டரை லட்சம் பரிசு; மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

மாநில அரசு அளிக்கும் நிதி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 6:13 pm
ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒடிசாவின் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 658 கலப்பு திருமணங்கள் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளன. எனவே கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் மாநில அரசு சன்மானம் வழங்கி வருகின்றது. முன்னதாக ரூ.1 லட்சம் என்றிருந்த இந்தத் தொகை, தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக கலப்பு திருமணத்திற்கான சன்மானம் உயர்த்தப்பட்டது.
Samayam Tamil Inter Caste Marriage


இதற்காக Sumangal.odisha.gov.in என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது எஸ்.டி மற்றும் எஸ்.சி மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லிணக்கத்தை பேணும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* இந்து மேல் சாதி மற்றும் இந்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையில் திருமணம் நடைபெற வேண்டும்.

* இந்த திருமணம் இந்து திருமணச் சட்டம் 1955ன் படி செல்லுபடியாக வேண்டும்.

பசுக்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்; முதல்வர் போட்ட அதிர்ச்சி உத்தரவு!

* இந்த சன்மானம் திருமணமான தம்பதிக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

* முதல்முறை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே அரசின் சன்மானம் கிடைக்கும்.

* கணவன் இறந்து விதவையான மனைவி அல்லது மனைவி இறந்து தனிமையில் வாழும் கணவன் மறுமணம் செய்து கொண்டால் இத்தகைய சன்மானம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி