ஆப்நகரம்

ஒடிசாவின் சுந்தர்கார் காடுகளில் 26 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அரிய கருஞ்சிறுத்தை!

ஒடிசாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு, அரிய கருஞ்சிறுத்தை தென்பட்டுள்ளது.

Samayam Tamil 22 May 2018, 1:54 pm
புவனேஸ்வர்: ஒடிசாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு, அரிய கருஞ்சிறுத்தை தென்பட்டுள்ளது.
Samayam Tamil Black Panther


ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டம் ஹெம்கிரி பகுதியில் உள்ள கர்ஜன்பஹத் அடர் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. இது கடந்த 26 ஆண்டுகளில் தென்பட்ட அரிய வகை கருஞ்சிறுத்தை என்று வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஒடிசாவில் கண்டறியப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை ஆகும். சிறுத்தைப் புலி போன்று தோன்றினாலும், கருப்பு நிறத்தில் காணப்படும். இந்திய சிறுத்தைப் புலிகளில் இருந்து மரபு ரீதியாக மாறுபட்டது என்று கர்ஜன்பஹத் வனப்பகுதியின் முதன்மை காப்பாளர் சந்திப் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இந்த அரிய கருஞ்சிறுத்தை, குறிப்பிட்ட கேமராவில் மட்டும் பலமுறை தென்பட்டுள்ளது. நாங்கள் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே, கருஞ்சிறுத்தை என முடிவுக்கு வந்தோம் என்று திரிபாதி கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, 6,000 ஏக்கர் கர்ஜன்பஹத் அடர் வனப்பகுதியில், பல்வேறு விலங்குகளை ஆய்வு செய்வதற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதே ஒடிசாவில் தான் ராயல் வங்கப் புலி கண்டறியப்பட்டது.
அங்குள்ள சிமிலிபால் பகுதியில் மெலானிஸ்டிக் வகை புலிகள், கடந்த 1993ல் கண்டறியப்பட்டது. அதன்மேல் கருப்பு நிற கோடுகள் இடம்பெற்றிருக்கும்.

Odisha's Sundargarh jungle spots rare black panther in 26 years.

அடுத்த செய்தி