ஆப்நகரம்

ஒருத்தரா? மூன்று பேரா? - கேரள யானை கொலை வழக்கில் முக்கிய அப்டேட்!

கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பற்றி இங்கே காணலாம்.

Samayam Tamil 5 Jun 2020, 12:40 pm
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவை சேர்ந்த கர்ப்பிணி யானை ஒன்று அருகிலுள்ள கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. அப்போது தனது பசியை அன்னாசிப்பழத்தை சாப்பிட்டுள்ளது. அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் யானையின் வாய்ப்பகுதி பெரிதும் காயமடைந்தது. இதையடுத்து உண்ண முடியாமல் தண்ணீர் குடிக்க முடியாமல் இரண்டு வாரங்கள் தவித்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் உடல் வலுவிழந்து சோர்வுற்று வெள்ளியாற்றில் இறங்கிய சூழலில் வாய் வழியாக ஏராளமான தண்ணீர் உள்ளே சென்றுள்ளது.
Samayam Tamil கர்ப்பிணி யானை உயிரிழப்பு


இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறி கடந்த 27ஆம் தேதி யானை உயிரிழந்துள்ளது. இதன் பிரேத பரிசோதனையில் வயிற்றில் குட்டி யானை இருந்தது தெரியவரவே விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

சாகும் முன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததா கர்ப்பிணி யானை? கண்கலங்கிய மருத்துவர்!

இதுபற்றி கேரள வனத்துறை அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றது. பலரும் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையில் பயிர்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை குறிவைத்து அன்னாசி பழத்தில் வெடி வைத்ததாக கூறப்படுகிறது. எனவே பழத்தை யாரும் நேரடியாக யானைக்கு கொடுத்திருப்பதாக தெரியவில்லை என்று தகவல்கள் பரவின.

இதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள வனத்துறை தனது ட்விட்டரில், யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தாங்க ரூ.2 லட்சம்; அந்த கர்ப்பிணி யானைக்கு நீதி வேண்டும் - உதவி பண்ணுங்க!

முன்னதாக மூன்று பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது.

அடுத்த செய்தி