ஆப்நகரம்

வெங்காயம் விலை உயர்வும்... வைரலாகி வரும் டிக் டாக் வீடியோக்களும்!!

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து, வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்ற நிலைமை மாறி, நினைத்தாலே கண்ணீர் வரும் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2019, 12:37 pm
தமிழகத்தில் இன்று வெங்காயத்தின் விலை ரூ. 150ஆக அதிகரித்துள்ளது. இதுவே தமிழகத்தின் மற்ற நகரங்களில் ரூ. 180 வரை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 220 வரை உயர்ந்துள்ளது.
Samayam Tamil டிக் டாக் வீடியோ
டிக் டாக் வீடியோ


நாடு முழுவதும் போதிய அளவு வெங்காயத்தின் விளைச்சல் இல்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதனால், தேவை அதிகரித்து விநியோகம் குறைந்து இருப்பதால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தானின் கிழக்கு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் பெரிய அளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் இந்த முறை பருவமழை அதிகமாக பெய்த காரணத்தால், விளைச்சல் பாதித்துள்ளது. சுமார் 70% அளவிற்கு பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
https://www.tiktok.com/@sonu.1211/video/6763544096066768129

இதையடுத்து மொத்த விற்பனையாளர்கள் 25டன்னும், சில்லறை விற்பனையாளர்கள் 5 டன் இருப்பு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும், ஜனவரி மத்தியில்தான் இந்தியா வந்தடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வடமாநிலங்களில் நடவு செய்யப்பட்டு இருக்கும் வெங்காயம் டிசம்பர் இறுதி வாரத்தில் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலும் மதுரை, தேனி போன்ற மாவட்டங்களிலும் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் மேலும் விலை அதிகரிக்கத்தான் வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் வெங்காயம் குறித்த டிக் டாக் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி