ஆப்நகரம்

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு; தேவசம் போர்டு அதிரடி முடிவு!

பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2020, 7:54 pm
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பக்தர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் வரும் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. பின்னர் ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் சாமி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தேவசம் போர்டு மிகத் தீவிரமாக பின்பற்றி வருகிறது. ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்க அனுமதி அளிக்கப்படுவது இல்லை.
Samayam Tamil Sabarimala Temple


தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் கட்டாயம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்கள் இருக்கிறதா என்று போலீசார் நிலக்கல்லில் சோதனை நடத்துகின்றனர்.

அதனை உறுதி செய்த பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர். இந்த சூழலில் பலரும் ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வந்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்த போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பக்தர்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அனுமதி தரப்படுவதில்லை.

‘கர்ணன்’ படப்பிடிப்பு நிறைவு - நெகிழும் தனுஷ்!

சம்பந்தப்பட்ட நபர்களை திரும்ப அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் 16 தேவஸ்தான ஊழியர்களுக்கும், காவலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது ஐயப்பன் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி