ஆப்நகரம்

சுதந்திர தின உரைக்காக மக்களிடம் கருத்து கேட்கிறார் பிரதமர்

டெல்லி : 2016ம் ஆண்டின் சுதந்திர தின விழா உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய மக்களிடம் பிரதமர் மோடி ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்கிறார்.

TOI Contributor 12 Aug 2016, 12:02 am
டெல்லி : 2016ம் ஆண்டின் சுதந்திர தின விழா உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய மக்களிடம் பிரதமர் மோடி ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்கிறார்.
Samayam Tamil opportunity to contribute to a prime ministerial speech from red fort
சுதந்திர தின உரைக்காக மக்களிடம் கருத்து கேட்கிறார் பிரதமர்



இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியாவின் பிரதமர் பழைய டெல்லியிலுள்ள செங்கோட்டையில் மூவர்ண்ண கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்த இருக்கிறார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப் பிறகு ஆற்றவிருக்கும் மூன்றாவது சுதந்திர தின உரை இதுவாகும்.இந்த சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய மக்களிடம் பிரதமர் மோடி ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்கிறார்.
Opportunity to contribute to a Prime Ministerial speech from Red Fort is just a click away: https://t.co/RP1CmYbNe6 pic.twitter.com/YOpNd1OwMs— MyGovIndia (@mygovindia) August 10, 2016


இதுகுறித்து இந்திய அரசின் மைகவ்.இன் என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செங்கோட்டையில் ஒய்யாரமான மேடையில் இருந்து ஆற்றப்படும் சுதந்திர தின உரையே இந்திய தேசத்தில் ஓர் ஆண்டின் முக்கியமான உரையாக கருதப்படுகிறது. அந்த சுதந்திர தின உரை எந்த வகையில் அமைய வேண்டும் என்பதை மக்களிடமே நேரடியாக கருத்து கேட்டு செதுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த ஆண்டும் நரேந்திர மோடி இதேபோல் மக்கள் கருத்தைக் கேட்டார்" என தெரிவிக்கபட்டுள்ளது.



மக்கள் மைகவ்.இன்(mygov.in) என்ற இணையதளம் மூலமாக தங்கள் கருத்துகள், யோசனைகளைத் தெரிவிக்கலாம். அதுதவிர பிரதமர் மோடியின் இணையதளம், மொபைல் அப்ளிகேஷன் வாயிலாகவும் கருத்துகளை பகிரலாம். அவ்வாறாக மக்கள் அனுப்பும் முக்கிய கருத்துகள் ஆகஸ்டு 15-ம் தேதி பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறும்.

அடுத்த செய்தி