ஆப்நகரம்

சபரிமலை விவகாரம்: கேரளா சட்டப்பேரவையில் கடும் அமளி

சபரிமலை ஐயப்பன் கோவில் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தக்கோாி அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினா் கடும் அமளியில் ஈடுபட்டனா்.

Samayam Tamil 29 Nov 2018, 1:12 am
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவா் என்ற அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தொிவித்து அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினா் கடும் அமளியில் ஈடுபட்டனா்.
Samayam Tamil Kerala Assembly.webp]


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து கேரளாவில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக கோவில் நடை தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மண்டல பூஜையின் போது பெண்கள் மட்டும் கோவிலுக்குள் செல்லும் வகையில் 2 நாட்கள் தனியாக ஒதுக்கப்படும் என்று மாநில அரசு சாா்பில் கேரளா உயா்நீதிமன்றத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தொிவித்தும், கோவில் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தக்கோாியும் அம்மாநில சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியினா் கடும் அளியில் ஈடுபட்டனா். மேலும், கோவில் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் வரை அவையை நடத்தவிடமாட்டோம் என்றும் எதிா்க்கட்சியினா் மிரட்டல் விடுத்துள்ளனா்.

அடுத்த செய்தி