ஆப்நகரம்

பணக்காரர்களுக்கு உ.பி. முதல்வர் யோகியின் வேண்டுகோள்

பணக்காரர்கள் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 16 Aug 2018, 4:14 am
பணக்காரர்கள் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil india-independence-day_5fb4bdd6-a08b-11e8-9345-8d51f8ed9678


மத்திய அரசு 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பாலான மருத்துவ சிகிச்சை இலவசமாகக் கிடைக்கும்.

இத்திட்டம் தீன்தயாள் உபாத்தாயாயாவின் பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும் போது, “மருத்துவச் செலவுகளுக்கு சொந்தமாக செலவளிக்கும் அளவு பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் மத்திய அரசின் ஆயஷ்மான் பாரத் திட்டத்திலிருந்து விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி