ஆப்நகரம்

கேரள இளைஞரின் உடல் உறுப்புக்கள் திருட்டா?: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கேரள இளைஞரின் உடல் உறுப்புக்களை அவரது குடும்பத்தின் அனுமதி இல்லாமல் சேலம் தனியார் மருத்துவமனை எடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வருக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 25 May 2018, 1:19 pm
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கேரள இளைஞரின் உடல் உறுப்புக்களை அவரது குடும்பத்தின் அனுமதி இல்லாமல் சேலம் தனியார் மருத்துவமனை எடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வருக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil கேரள இளைஞரின் உடல் உறுப்புக்கள் திருட்டா?
கேரள இளைஞரின் உடல் உறுப்புக்கள் திருட்டா?


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் அனுப்பியுள்ள கடிதத்தில், ''சென்னையில் இருந்து பாலக்காட்டில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் திரும்பிக் கொண்டு இருக்கும்போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஓட்டுனர் உள்பட மொத்தம் ஏழு பேர் காயமடைந்தனர். இவர்கள் முதலில் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக இவர்கள் சேலத்தில் இருக்கும் விநாயகா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் கடந்த செவ்வாய்கிழமை மணிகண்டன் மூளைச்சாவு அடைந்திருப்பதாக மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வென்டிலேட்டருக்கு மணிகண்டனின் உடலை மாற்றிய மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும் என்று மணிகண்டனின் குடும்பத்தினதிடம் கட்டணத்துக்கான பில் கொடுத்துள்ளனர். இந்தக் கட்டணத்தை கட்டிவிட்டு மணிகண்டனின் உடலை மீனாட்சிபுரத்துக்கு எடுத்து செல்லுமாறு, மருத்துமனை கட்டளை பிறப்பித்துள்ளது. ஆனால், மணிகண்டனின் குடும்பத்தினரிடம் அவ்வளவு பணம் இல்லை.

இதையடுத்து, சில பில்கள் மற்றும் வெற்று தாள்களில் மணிகண்டனின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை கையெழுத்து பெற்றுள்ளது. பின்னர், மணிகண்டனின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் அவரது உடலில் இருந்து முக்கிய பாகங்களை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்கான ஆவணங்ளையும் மருத்துவமனை நிர்வாகம் அளிக்கவில்லை. இந்த பயங்கரமான, மோசமான மருத்துவ மோசடியை ஏற்றுக் கொள்ள முடியாது. விரைவில் விசாரணை மேற்கொண்டு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுளார்.

அடுத்த செய்தி