ஆப்நகரம்

ரஜினி பாஜக.,வுக்கு வந்தால் வரவேற்க தயார் : அமித் ஷா

நடிகர் ரஜினிகாந்த் பாஜக.,வுடன் இணைய விரும்பினால் அதற்கு தயாராக இருப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

TNN 21 May 2017, 3:09 pm
புதுடெல்லி : நடிகர் ரஜினிகாந்த் பாஜக.,வுடன் இணைய விரும்பினால் அதற்கு தயாராக இருப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil our doors for rajinikanth are open says bjp president amit shah
ரஜினி பாஜக.,வுக்கு வந்தால் வரவேற்க தயார் : அமித் ஷா


அண்மையில் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், அரசியலில் வருவது குறித்து பேசினார். போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், அதுவரை என் ரசிகர்கள் அனைவரும் தயாராகுங்கள் என பேசியதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவார் எனவே தெரிகின்றது.

அமித் ஷாவை சந்தித்த பத்திரிக்கையாளர்கள், ரஜினி பாஜகவுடன் இணைவார் என பேச்சு அடிபடுகின்றதே உண்மையா என கேட்டனர். அதற்கு ரஜினி பாஜகவில் இணைய விரும்பினால் அவருக்காக பாஜகவின் கதவு எப்போதும் திறந்திருக்கும். அவரை பாஜகவில் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம்.

இருப்பினும் ரஜினி முதலில் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்க்கமான முடிவு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி