ஆப்நகரம்

Aircel Maxis Case: டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2018, 1:10 pm
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil 131260-chidambaram

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு வரம்பை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்படுகிறார்.

இதே போல, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் ப.சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டப்படுகிறது.

இவ்விரு வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுக்கள் மீதான வழக்கு இன்று மதியம் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி