ஆப்நகரம்

பதான்கோட் விவகாரம்: மார்ச் 27-ல் பாக்., குழு வருகை

பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தான் குழு வருகிற 27-ம் தேதியன்று இந்தியா வரவுள்ளது.

TNN 18 Mar 2016, 12:08 pm
புதுதில்லி: பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தான் குழு வருகிற 27-ம் தேதியன்று இந்தியா வரவுள்ளது.
Samayam Tamil pak probe team in india on march 27 pm modi and nawaz sharif may meet in us
பதான்கோட் விவகாரம்: மார்ச் 27-ல் பாக்., குழு வருகை


நேபாள நகரமான பொகாராவில், "சார்க்' உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற 37-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டார்.

இதனிடையே, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் பிரதமருக்கான வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, பதான்கோட் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதனையடுத்து, பதான்கோட் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தங்கள் தரப்பு விசாரணையை மேற்கொள்ள, பாகிஸ்தானின் கூட்டு விசாரணைக் குழு வருகிற 27-ம் தேதியன்று இந்தியா வரவுள்ளது என்றார்.

பதான்கோட் தாக்குதல் விவகாரத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் சிறப்பாக கையாண்டு வருகின்றன. அமெரிக்காவில் வருகிற 31-ம் தேதி நடைபெறவுள்ள அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. இருப்பினும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை சர்தாஜ் அஜீஸ் வழங்கினார்.

அடுத்த செய்தி