ஆப்நகரம்

அபிநந்தன் மீசையை கிண்டலடித்து இந்தியர்களிடம் திட்டு வாங்கிய பாக்., நடிகை

அபிநந்தனின் மீசையை பார்த்து, இதுபோன்ற ஒரு மீசையை நான் இதற்குமுன்னால் கண்டதில்லை என டிவீட் செய்து, அருகில் மீசைகளின் வகைகளை விளக்கும் படத்தை பகிர்ந்துள்ளார் ஒரு பாக்., நடிகை.

Samayam Tamil 28 Feb 2019, 5:30 pm
Samayam Tamil veena-malik-on-wing-commander-abhinandan-varthaman

இந்திய மக்களின் ஒட்டுமொத்த பிராத்தனையே விமானப்படை வீரர் அபிநந்தன் நாடு திரும்ப வேண்டும் என்பது தான். அவர் எப்போது பாரத தேசம் வருவார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளார்கள்.

இதற்கு நடுவில் சில பரபரபரப்பான தகவல்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் நாயகி வீணா மாலிக் இந்தியர்களை கோபப்படுத்தும் வகையில் அபிநந்தன் மற்றும் இந்திய விமானப்படையை கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
அதைபார்த்த மக்கள் அவர் மீது கடும் கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

அபிநந்தனின் மீசையை பார்த்து, இதுபோன்ற ஒரு மீசையை நான் இதற்குமுன்னால் கண்டதில்லை என டிவீட் செய்து, அருகில் மீசைகளின் வகைகளை விளக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அடுத்த செய்தி