ஆப்நகரம்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒத்திகைப்பயிற்சி!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒத்திகைப்பயிற்சி!

TNN 28 Sep 2016, 1:05 pm
ஜெய்சல்மர் : உரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து எல்லைப்பகுதியில் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியா –பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஜெய்சல்மரில் இருந்து 20 கிமீ தூரத்தில் பாகிஸ்தான் ராணுவமும், அவர்களின் விமானப்படையும் போர் ஒத்திகைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் கடந்த 22ம் தேதி முதல் இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 30ம் தேதி வரை போர் ஒத்திகைப்பயிற்சி நடைபெறவுள்ளது.
Samayam Tamil pakistan army war game exercising near india jaiselmar border india pakistan war
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒத்திகைப்பயிற்சி!

பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 15,000 பேரும், விமானப்படையை சேர்ந்த 300 பேரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கராச்சியை சேர்ந்த 5 தனிக்குழு, முல்தானை சேர்ந்த 2 அதிரடிப்படை குழு மற்றும் 205 படைகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை பாகிஸ்தான் அரசு சோதனை செய்து பார்க்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய்சல்மர் அருகில் உள்ள பாகிஸ்தான் பகுதியான ரஹிமெர் கான், கோட்டகி, ஷாதி கா பாத், மீர்பூர், மென்தோலோ ஆகிய இடங்களில் போர் ஒத்திகைப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

Pakistan army war game exercise near international border adjoining Jaisalmer, india Pakistan war.

அடுத்த செய்தி