ஆப்நகரம்

மோடியை கொன்னா ரூ.50 கோடி; அழைப்பு விடுத்த பாகிஸ்தானியருக்கு வலைவீச்சு

மோடியை கொன்றால் ரூ.50 கோடி கொடுப்பதாக அழைப்பு விடுத்த பாகிஸ்தானியருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

TNN 22 May 2017, 5:55 pm
போபால்: மோடியை கொன்றால் ரூ.50 கோடி கொடுப்பதாக அழைப்பு விடுத்த பாகிஸ்தானியருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
Samayam Tamil pakistan mystery caller offers rs 50 crore to man for killing pm modi
மோடியை கொன்னா ரூ.50 கோடி; அழைப்பு விடுத்த பாகிஸ்தானியருக்கு வலைவீச்சு


மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் குஷால் சோனிக்கு, கடந்த 20ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பிரதமர் மோடியை பேரணியின் போது கொன்றால், ரூ.50 கோடி அளிப்பதாக ஒருவர் கூறியுள்ளார். அவர் தன்னை பாகிஸ்தானில் இருந்து அழைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் +79651219 என்ற எண்ணிலிருந்து அழைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே 2 பேரை தேர்வு செய்துவிட்டதாகவும், 3வது நபர் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாதக் குஷால் சோனி, பின்னர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் மித்லேஷ் குமார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். விசாரணைக்கு பின்பே, இது உண்மையான நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்ட கருத்தா அல்லது பொய்யான கருத்தா என்று தெரிய வரும் என்று குறிப்பிட்டார். முதல்கட்ட விசாரணையில் தொலைபேசி அழைப்பு கஜகஸ்தான் நாட்டிலிருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Madhya Pradesh police registered a case against unknown people on Saturday after a youth in Satna district received a call from a man who allegedly offered him Rs 50 crore to join them in killing Prime Minister Narendra Modi at a rally.

அடுத்த செய்தி