ஆப்நகரம்

காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைக்கிறது; மோடி

குஜராத் தேர்தலில் காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

TNN 11 Dec 2017, 9:23 am
குஜராத் தேர்தலில் காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Samayam Tamil pakistan working with congress to beat bjp in gujarat polls pm
காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைக்கிறது; மோடி


குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று அங்குள்ள பலன்பூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் நடந்ததாகவும், அந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானதாக குறிப்பிட்டார்.

மேலும், அந்த கூட்டத்திற்கு மறுநாள் தான், மணிசங்கர் தன்னை இழிவானவர் என்று விமர்சித்ததாகவும், குஜராத் முதல்வராக காங்கிரசை சேர்ந்த அகமது படேல் போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய மோடி, குஜராத் தேர்தலில் காங்கிரசும் பாகிஸ்தானும் சேர்ந்து பாஜகவை வீழ்த்த நினைப்பதாகவும், அது ஒரு போதும் நடக்காது என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி