ஆப்நகரம்

தொடர்ந்து 14 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து 14 நாட்களாக முடங்கியுள்ளன.

Samayam Tamil 23 Mar 2018, 12:25 am
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து 14 நாட்களாக முடங்கியுள்ளன.
Samayam Tamil New Delhi: Lok Sabha Speaker Sumitra Mahajan adjourns the House as MPs gather ne...


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 5ஆம் தேதி தொடங்கியது. இதில், பல விவகாரங்களை முன்வைத்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஈடுபட்டதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல் போடுவதால் அலுவல்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காதக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் தொடரும் அமளியால் இதுவும் விவாதத்துக்கு வரவில்லை.

வியாழக்கிழமை கூடிய கூட்டத்திலும் கூச்சல் குழப்பம் நீடித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கோஷமிட்டனர். பல கட்சிகளும் தங்கள் கோரிக்கையை வலியறுத்தி முழக்கமிடத் தொடங்கியதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை கூடியதும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு கூப்பாடு போட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு தொடர் அமளியால் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்ச்சியாக 14 நாட்களாக முடங்கியுள்ளது.

அடுத்த செய்தி