ஆப்நகரம்

Jet Airways: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது மற்றும் மூக்கில் ரத்த கசிவு!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், பயணித்த 30-க்கு மேற்பட்ட பயணிகளுக்கு மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் கசிந்ததால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

Samayam Tamil 20 Sep 2018, 11:44 am
ஜெட்ஏர்வேஸ் விமானத்தில், பயணித்த 30-க்கு மேற்பட்ட பயணிகளுக்கு மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் கசிந்ததால் அவசரமாக மும்பையில்தரையிறக்கப்பட்டது.
Samayam Tamil jet-airways-flight-784x441


மும்பையில் இருந்து ஜெய்பூருக்குஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 737 விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம்பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே விமானத்தில் இருந்த பயணிகளில் பலருக்கும் மூக்கு மட்டும் காதுகளில் இருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.

https://tamil.samayam.com/news-video/news/shocking-passengers-experience-nose-ear-bleeding-on-jet-airways-flight/videoshow/65881501.cms

இதனால் உடனடியாக விமானம் மும்பையிலேயே தரையிரக்கப்பட்டது. 166 பயணிகளில் 30 பேருக்கு மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் கசிந்துள்ளது. மேலும் பலருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 8 பயணிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாகஜெட் ஏர்வேஸ் அதிகாரிலலித் குப்தா கூறுகையில் ‘ விமானம் பறக்க தொடங்கும் முன் விமானி ‘ bleed switch’ என்றபொத்தானை அழுத்த மறந்ததால்இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட எல்லா பயணிகளும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தவறுக்கு காரணமான விமானிகள் மற்றும் விமானத்தின்குழுவினரிடம்விசாரணை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி