ஆப்நகரம்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டோம்... 1000 பேர் குணமாகிவிட்டனர்... பதஞ்சலி பகீர் தகவல்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1000 பேரை குணப்படுத்தியுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Jun 2020, 12:54 pm
கொரோனாவால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸால் ஏற்படும் கோவிட்-19 நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஏராளமான நாடுகள் பணத்தைக் கொட்டி முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே 1000 பேரை குணப்படுத்திவிட்டதாகவும் பதஞ்சலி தெரிவித்துள்ளது.
Samayam Tamil பாபா ராம்தேவ்


இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் துனை நிறுவனரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆஜ் தக் தொலைக்காட்சியிடம் பேசுகையில், “பதஞ்சலியின் கொரோனா மருந்து ஏற்கெனவே சுமார் 1000 பேரை குணப்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு கொரோனா நோயாளிகளுக்கு பதஞ்சலி மருந்து கொடுக்கப்பட்டுள்ள்ளது. அவர்களில் 80% பேர் விரைவில் குணமடைந்துவிட்டனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாகவே மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பதஞ்சலி இறங்கிவிட்டது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு துறையும் மருந்து கண்டுபிடிக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தன. பதஞ்சலி மருந்து பரிசோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டு முழுவதுமாக உருவாக்கப்பட்டுவிட்டது.

வேதங்களை கவனமாக படித்து கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கியிருக்கிறோம். வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சூத்திரங்களை கடைப்பிடித்து முழுக்க முழுக்க ஆயுர்வேத பொருட்களை கொண்டு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இம்மருந்தை உருவாக்குவதற்காக பதஞ்சலி விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்தனர். தற்போது அரசு விதிமுறைப்படி பதஞ்சலி மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி