ஆப்நகரம்

நோயாளியை கட்டிலில் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடக்கும் அவலம்

சாலை வசதி இல்லாததால் மத்தியப் பிரதேச கிராமம் ஒன்றில் நோயாளியை அவரது உறவினர்கள் கட்டிலுடன் தூக்கிக்கொண்டு வெள்ளமாகச் செல்லும் ஆற்றைக் கடந்துசெல்லும் அவலம் நடந்திருக்கிறது.

Samayam Tamil 9 Sep 2018, 4:37 pm
சாலை வசதி இல்லாததால் மத்தியப் பிரதேச கிராமம் ஒன்றில் நோயாளியை அவரது உறவினர்கள் கட்டிலுடன் தூக்கிக்கொண்டு வெள்ளமாகச் செல்லும் ஆற்றைக் கடந்துசெல்லும் அவலம் நடந்திருக்கிறது.
Samayam Tamil svd

பாஜகவின் சிவ்ராஜ் சிங் சௌகான் ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தாமோ பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒரு நோயாளியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல சாலை வசதி இல்லாமல் ஆபத்தான வழியில் சென்றுள்ளானர்.

நோயாளியைக் கட்டிலில் படுக்க வைத்து தூக்கிச் சென்ற அவர்கள் வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர்.
உள்ளூரிலேயே மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் ஆற்றைக் கடக்க பாலமும் சாலையும் அமைத்துத்தர வேண்டும் எனவும் தாமோ மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி