ஆப்நகரம்

ஆண் மயில் உடலுறவு கொள்ளாது : வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட நீதிபதி

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் பேச்சால் மயில் உடலுறவு கொள்ளும் விஷயம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Hindustan Times 1 Jun 2017, 9:12 pm
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் பேச்சால் மயில் உடலுறவு கொள்ளும் விஷயம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Samayam Tamil peacocks dont have sex raj hc ex judge says reference in religious texts
ஆண் மயில் உடலுறவு கொள்ளாது : வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட நீதிபதி


பசுவை தேசிய விலங்காக பிரகடனப்படுத்த மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி மகேஷுக்கு இந்த வழக்கு தான் கடைசி வழக்கு இந்த வழக்கோடு அவர் ஓய்வு பெற்றார்.

பசுவை ஏன் தேசிய விலங்காக அறிவிக்கவேண்டும் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ," 33 கோடி கடவுள்கள் பசுவினுள் வசிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. பசு ஒரு மருத்துவமனையையே தனக்குள் கொண்டுள்ளது. ஆக்ஸிஜனை உட்கொண்டு மீண்டும் ஆக்ஸிஜனையே வெளியேற்றுவது பசு மட்டும்தான். கல்லீரல், இதயம் உள்ளிட்டவற்றை கோமியம் பாதுகாக்கும், கோமியம் குடிப்பதால் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மாடு, அதன் கொம்புகள் வழியாக, காஸ்மிக் சக்தியை (உறிஞ்சிவிடும். இதனால்தான் பசுவை தேசிய விலங்காக்க வேண்டும் " என்று கூறினார்.

அவர் இதோடு மட்டுமல்லாமல் மற்றொரு விஷயத்தையும் கூறினார்.அதில், " ஆண் மயில் உடலுறவு கொள்வது இல்லை. அது எப்போதும் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. . ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது. எனவே தான் ஆண் மயில் தேசிய பறவையாக உள்ளது.'' என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா கூறினார். இது குறித்து சமூகவலைதள வாசிகள் அந்த நீதிபதியை கலாஉத்து ஆதாரங்களுடன் தங்களது கருத்தை பதிவிட்டுவருகின்றனர்.


அடுத்த செய்தி