ஆப்நகரம்

வெங்காயம் என்ன விலைடா விக்குது? திருடனை புரட்டி எடுத்த மக்கள்!

வெங்காய மூட்டைகளை திருடிச் சென்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Dec 2019, 9:13 am
சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் அடிபடுவது வெங்காயம். இதனை சமையலுக்கு அரியும் முன்பே, இதன் விலை நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. நாடு முழுவதும் பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Onion


இதனால் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் இந்தியாவின் வெங்காய பற்றாக்குறையை பூர்த்தி செய்ய துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 17,000 டன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

தெலங்கானா என்கவுன்ட்டர்: நான்கு பேரும் பல குற்றங்களை செய்திருக்கலாம்

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு வெங்காய திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. அங்குள்ள குபேர் மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்த மார்க்கெட்டில் உள்ள வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கடையில் பூண்டு, வெங்காயம், மிளகாய் மூட்டை போன்றவை சமீபத்தில் திருடுபோயுள்ளன. இதையடுத்து வியாபாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அட்டூழியங்களை நிறுத்த என்ன செய்யப்போகிறது உ.பி. அரசு

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வெங்காய மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளார். அவரைப் பிடித்து விசாரிக்கையில் வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனே அவரை பிடித்து செம அடி கொடுத்தனர். பின்னர் அருகிலிருந்த கம்பத்தில் கட்டி வைத்து வியாபாரிகள், பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கு: உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா

இதற்கு முன்பு மத்தியப் பிரதேசத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் வெங்காயம் திருடு போன சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அடுத்த செய்தி