ஆப்நகரம்

500 ஆண்டுகளுக்குப் பின் செருப்பு, தலைப்பாகை அணியும் மக்கள் - அயோத்தி தீர்ப்பு எதிரொலி

அயோத்தி தீர்ப்பு வந்ததையொட்டி, தோராயமாக சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன...

Samayam Tamil 21 Nov 2019, 9:45 pm
500 ஆண்டுகாலம் கழித்து சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள் தற்போது மீண்டும் தலைப்பாகை மற்றும் தோல் செருப்பு அணியத் துவங்கியுள்ளனர்.
Samayam Tamil suryavanshi


அயோத்தியிலும் அதனைச் சுற்றியுள்ள 150 கிராமங்களிலும், சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சூர்யவன்ஷி சத்ரியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை ஸ்ரீராமபிரானின் வழிவந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

அயோத்தி தீர்ப்பு வந்ததையொட்டி, சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன...


அயோத்தியில் பாபருடன் போரிட்டவர்கள் சூரியவன்ஷி க்ஷத்ரியர்கள் என்று சொல்லப்படுகிறது. ராம ஜன்ம பூமியைப் பாதுகாக்க பாபரை எதிர்த்து கடுமையாகப் போர்புரிந்த இவர்கள் அப்போரில் தோல்வியைத் தழுவினர். ஏராளமான சூரியவன்ஷி க்ஷத்திரியர்கள் இதில் இறந்தனர்.

அப்போதிலிருந்து ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் வரை சூரியவன்ஷி சத்திர்யர்கள் யாரும் தலைப்பாகை அணியமாட்டோம், குடை பிடிக்கமாட்டோம் இத்துடன் காலில் தோலால் செய்யப்பட்ட காலணிகளை அணியமாட்டோம் என்றும் சபதம் ஏற்றனர்.

அயோத்தி தீர்ப்பு: சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!

இவ்வளவு வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்துள்ளனர் இந்த மக்கள்.



இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து, கிராமங்களில் பெரிய அளவில் பொது விழாக்கள் நடத்தி தலைப்பாகையை க்ஷத்ரிய வம்சத்தினருக்கு அளித்தும் அணிவித்தும் வருகின்றனர்.

அயோத்தி தீர்ப்பு: சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!

இதுவரை 400க்கும் அதிகமான பேருக்கு தலைப்பாகைகள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறத் துவங்கியுள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் கவனம் பெற்று வருகிறது.

அடுத்த செய்தி