ஆப்நகரம்

ஓட்டுநர் வேலைக்குப் போட்டியிடும் முதுகலை, பொறியியல் பட்டதாரிகள்; இதுதாங்க உண்மையான குஜராத்!

ஓட்டுநர் வேலைக்கு பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.

Samayam Tamil 21 May 2018, 6:38 pm
காந்திநகர்: ஓட்டுநர் வேலைக்கு பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil Driver Job


குஜராத் உயர்நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றங்களில் 24 ஓட்டுநர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10,300 விண்ணப்பங்கள் குவிந்தன.

இதற்கான கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு. ஆனால் விண்ணப்பித்தவர்களில் 55% பேர் இளநிலை, முதுகலை பட்டதாரிகள். மேலும் எம்.பி.ஏ, எம்.எஸ்.ஸி, எம்.டெக், எல்.எல்.பி மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 7 பெண்களும் அடங்கும். கடந்த 2 ஆண்டுகளில் 12,689 பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆனால் 4.95 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த சூழலில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் மிகக்குறைந்த அளவில், அதாவது 0.9% இருப்பதாக மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தேசிய வேலைவாய்ப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

PG graduates applied for drivers job at Gujarat High Court.

அடுத்த செய்தி