ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு மிரட்டல்: பாக்.,-கில் இருந்து தூது வந்த புறா கைது

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் தூது கொண்டு வந்த புறா கைது செய்யப்பட்டுள்ளது.

TNN 3 Oct 2016, 9:58 am
புதுதில்லி: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் தூது கொண்டு வந்த புறா கைது செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pigeonthreat pm modi gets threat from pigeon
பிரதமர் மோடிக்கு மிரட்டல்: பாக்.,-கில் இருந்து தூது வந்த புறா கைது


உரி பகுதியில் ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் சுமார் 19 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனையடுத்து, இந்திய தரப்பில், எல்லை தாண்டி தீவிரவாத முகாம்கள் வீழ்த்தப்பட்டன. இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமூகமான சூழல் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானில் இருந்து புறா #pigeonthreat மூலம் மிரட்டல் தூது வந்துள்ளது.அதன் காலில் கட்டப்பட்டிருந்த கடிதத்தில், கடந்த 1971-ஆம் ஆண்டு நடந்த போர் போன்று அல்ல. அந்த மனநிலையில் தற்போது பாகிஸ்தானியர்கள் இல்லை. சிறு குழந்தை உள்பட அனைவரும் போர் புரியு தயார் என உருது மொழியில் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது. இந்த புறாவை பிடித்த எல்லை பாதுகாப்பு படையினர், அதனை கைது செய்து கூண்டில் அடைத்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநில கிராமம் ஒன்றில் மோடிக்கு மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட இரண்டு பலூன்கள் கைப்பற்றப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.

PM Modi gets threat from Pigeon #IndiaPakistanWar #SurgicalStrike #pigeonthreat

அடுத்த செய்தி