ஆப்நகரம்

குஜராத்: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு எதிராக வழக்கு

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து இந்திய விவசாயிகள் சங்கம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2018, 1:52 pm
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து இந்திய விவசாயிகள் சங்கம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
Samayam Tamil PIL against mandetory crop insurance under PMFBY before Guj HC


பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்தாண்டுக்கான பயிர்க் காப்பீடு தொகைகளை செலுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருந்தது.

இதனிடையே, பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்தியவிவசாய சங்கம் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,காப்பீடு திட்டத்தை கட்டாயமாக்கக் கூடாது என்றும், காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு எந்தவிதமான ரசீதும் ஒப்புதலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் காப்பீடு திட்டத்துக்கு வராத பயிர் வகைகள் இழப்பு ஏற்படுவதாகவும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிர் காப்பீடு திட்டத்தின் படிவம் மாநில மொழியில் இருக்க வேண்டும், காப்பீடு தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டும், பயிர் இழப்பீடு தொடர்பாக மாநில அரசுகளுக்கு பல முறை வலியுறுத்தியும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏற்க்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி விசாரித்து வருகிறார்.

அடுத்த செய்தி