ஆப்நகரம்

புளூ வேல்க்கு மாற்றாக பின்க் வேல்

விளையாடும் சிறுவா்கள் பலரை தற்கொலைக்கு தூண்டி பலரது உயிரை பறித்த புளூ வேல் கேமுக்கு மாற்றாக தற்போது பின்க் வேல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TOI Contributor 20 Aug 2017, 7:28 pm
விளையாடும் சிறுவா்கள் பலரை தற்கொலைக்கு தூண்டி பலரது உயிரை பறித்த புளூ வேல் கேமுக்கு மாற்றாக தற்போது பின்க் வேல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil pink weale as a replacement for blueweal
புளூ வேல்க்கு மாற்றாக பின்க் வேல்


தற்கொலை விளையாட்டு என்று பெயா் பெற்றுள்ள புளூ வேல் எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தனிமும் ஒரு பணி என தொடா்ச்சியாக 50 நாட்கள் கடினமான பணிகள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்து கொள்ள தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் இந்த விளையாட்டை விளையாடிய 133 போ் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் பலா் இந்த விளையாட்டால் உயிாிழந்து வருகின்றனா். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கோாிக்கை விடுத்து வருகின்றன. இந்தியாவில் இந்த விளையாட்டை தடை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பின்க் வேல் என்ற புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகளில் கிடைக்கும் இந்த கேம் ஒருவருக்குள் அன்பை பாிமாறச் செய்வது போன்ற பண்புகளை கொண்டுள்ளது. 50 சவால்களை கொண்ட பின்க் வேலில் அனைத்து படிநிலைகளும் வித்தியாசமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான டவுன்லோடுகளை பின்வேல் கேம் அனைவாிடத்திலும் அன்பை வளா்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Pink Weale as a replacement for BlueWeal

அடுத்த செய்தி