ஆப்நகரம்

பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TNN 18 Nov 2017, 11:01 am
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil plastic bottles banned in maharashtra school and colleges
பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை.!


மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தலைமைச் செயலகத்தில் இந்த திட்டம் அமல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி மகாராஷ்டிர புத்தாண்டு தினமான அன்று, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் தடை அமல் செய்யப்படும். தடையை மீறும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேநேரம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படாது என்று மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தியாளர்களுடன் மகாராஷ்டிர அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை மட்டும் தயார் செய்யுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி