ஆப்நகரம்

ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் 10 லட்சம் நிதியுதவி

கடந்த 2014ம் ஆண்டு கட்டுமான பணிக்காக ஆயிரக்கணக்கான வடஇந்தியர்கள் ஈராக் சென்றனர். அப்போது அங்கு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், 39 இந்தியர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

Samayam Tamil 3 Apr 2018, 4:22 pm
கடந்த 2014ம் ஆண்டு கட்டுமான பணிக்காக ஆயிரக்கணக்கான வடஇந்தியர்கள் ஈராக் சென்றனர். அப்போது அங்கு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், 39 இந்தியர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
Samayam Tamil ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் 10 லட்சம் நிதியுதவி
ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் 10 லட்சம் நிதியுதவி

பின்னர், 2017ம் ஆண்டு மொசூல் அருகே உள்ள சிறையில் 39 இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சிறையை ஐ.எஸ் பயங்கரவாதிகள் தகர்த்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இதனால், அங்கிருந்த இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதனை உறுதி செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மொசூல் மற்றும் பாதுஷ் பகுதியில் உள்ள இடுகாடுகளில் தோண்டுடி எடுக்கப்பட்ட உடல்களை டிஎன்ஏ சோதனை செய்ததில் அவர்கள் நமது இந்தியர்கள் என்று கடந்த மார்ச் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இதையடுத்து, அவர்களில் 38 பேரின் உடல் தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து உயிரிழந்த பஞ்சாப் மாநிலத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி