ஆப்நகரம்

பிரதமர் மோடி உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? அனல் பறக்கும் கருத்து மோதல்!

எனது குடும்பத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பதன் மூலம் நிதிஷ்குமார் பிரதமர் மோடியை குறிவைக்கிறார் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 27 Oct 2020, 7:12 pm
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நவம்பர் மாதம் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அதற்கு எதிரான மெகா கூட்டணிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 2005ஆம் ஆண்டு முதல் பிஹார் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் 4ஆவது முறையாக மீண்டும் களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி சார்பில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தை மறைமுகமாக விமர்சித்தார். “அவருக்கு தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகிய மகன்களையும் சேர்த்து மொத்தம் 9 பிள்ளைகள். அதில் 7 பேர் பெண் குழந்தைகள். ஏராளமான பெண் குழந்தைகளுக்கு பின்னரே ஆண் குழந்தைகள் பிறந்தனர். பெண்கள் குழந்தைகள் மீது நம்பிக்கையில்லாமல் அவரது ஆண் குழந்தைகளை முன்னிலைப் படுத்துகிறார். அது போன்று பிஹாரையும் ஆக்க விரும்புகிறார்கள். இதன்மூலம் பிஹார் எந்த அளவுக்கு அழிந்து போகும் என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளாலாம். பிஹார் முற்றிலுமாக அழிக்கப்படும். நீங்கள் விரும்பும் பிஹார் இதுதானா என்று நிதிஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

அதிகார போதையில் பிஹார் அரசு: நிதிஷ்குமாரை வெளுத்து வாங்கிய சோனியா!

இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் என்னை அவமானப்படுத்தியதை அவரது வாழ்த்தாக பெற்றுக் கொள்கிறேன். மனதளவிலும், உடலளவிலும் அவர் சோர்ந்து போய்விட்டதால் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார். இந்த முறை வேலைவாய்ப்புக்கும், வளர்ச்சிக்கும் பிஹார் வாக்களிக்கவுள்ளது என்றார்.


மேலும், எனது குடும்பத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பதன் மூலம் நிதீஷ்குமார் பிரதமர் மோடியை குறிவைக்கிறார். பிரதமர் மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர். இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் பெண்களையும், என்னுடைய தாயாரையும் நிதிஷ்குமார் அவமானப்படுத்தி விட்டார். ஊழல், வேலையின்மை போன்ற ஏராளமான பிரச்சினைகளை அவர்கள் பேசவில்லை என்றும் தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார்.

அடுத்த செய்தி