ஆப்நகரம்

பிரதமர் மோடியை சந்தித்த மம்தா..!

இரு நாட்கள் பயணமாக கொல்கத்தாவுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடியை ராஜ்பவனில் வைத்து மம்தா பானர்ஜி சந்திப்பு...

Samayam Tamil 11 Jan 2020, 6:28 pm
தமிழகம், கேரளாவை அடுத்து பாஜகவுக்கு பெரும்பான்மையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. மத்தியில் கொண்டு வரும் எந்த சமமற்ற திட்டமும் தன் மாநிலத்தில் எடுபடாது என்று அவர் விடும் கர்ஜனையே வேறுதான்.
Samayam Tamil பிரதமர் மோடியை சந்தித்த மம்தா


அந்த வகையில் மக்களவையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவை மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அச்சட்டம் அமலாகியது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து வட மற்றும் தென் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

19 அடுக்கு மாடி, விலையோ பல கோடி... ஒரு செக்கண்டில் இடித்து தள்ளிய அதிகாரிகள்... வீடியோ

அப்போதும் சிறுபான்மையினரை எதிர்க்கும் இந்த சட்டத்தை மேற்கு வங்கம் ஒரு போதும் ஏற்காது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அச்சட்டத்தை எதிர்த்து பேரணியை நடத்தினார். குடியுரிமை சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகும் தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் மம்தா இன்று பிரதமர் மோடியை சந்தித்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரண்டு நாட்கள் பயணமாக அம்மாநிலத்துக்கு சென்றுள்ள மோடி கொல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அங்குள்ள ராஜ்பவனில் தங்கியுள்ள அவரை மேற்கு மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் '' குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும்'' என்பதை குறித்து விவாதித்ததாக கூறினார்.

அடுத்த செய்தி