ஆப்நகரம்

Cyclone Amphan: மேற்குவங்க மாநிலத்திற்கு ரூ. 1,000 கோடி: பிரதமர் அறிவிப்பு!!

அம்பன் புயல் பாதித்த மேற்குவங்கத்தின் சேதமடைந்த பகுதிகளை இன்று பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அந்த மாநிலத்திற்கு நிவாரணத் தொகையாக உடனடியாக 1,000 கோடி அளிப்பதாக அறிவித்தார்.

Samayam Tamil 22 May 2020, 2:34 pm
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தா உள்பட பல இடங்களை அம்பன் புயல் சல்லடையாக்கி சென்றது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில இடங்களில் மனித சடலங்கள் கண்டறிந்து இருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியாகி இருந்தன.
Samayam Tamil பிரதமர் மோடியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி


இந்த நிலையில் புயலால் பாதித்த இடங்களை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கேட்டுக் கொண்டு இருந்தார். இதையடுத்து இன்று காலை கொல்கத்தாவுக்கு மோடி வந்தார். அவருடன் மம்தாவும் ஹெலிகாப்டரில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.

இதற்குப் பின்னர் மம்தா பானர்ஜி, மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஆகியோருடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பேட்டி அளித்த பிரதமர் மோடி, ''மாநிலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 1000 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு ஒதுக்குகிறது. ஒரு பக்கம் கொரோனா தொற்று நோயை எதிர்கொண்டு இருக்கும்போது மறுபக்கம் சில இடங்களை புயல் தாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் ஆபத்தான இடங்களில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மறுவாழ்வு, மறுகட்டமைப்பு என்று அனைத்துக்கும் மத்திய அரசு துணை நிற்கும். சோதனையான கால கட்டத்தில் மேற்குவங்க மாநிலத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும். சோதனை நேரத்திலும் மேற்குவங்கம் துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது'' என்றார்.
அம்பன் புயல் பாதிப்பின் நிலை என்ன? மேற்குவங்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
இதை முடிந்துகொண்டு புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.
ற்குவங்கத்தில் புயலுக்கு இறந்த 72 பேரில் 15 பேர் கொல்கத்தாவில் உயிரிழந்தவர்கள். அம்பன் புயல் தரையில் விழாமல், வடக்கு பங்களாதேஷ் பகுதியில் கடலில் தாழ்வழுத்த மண்டலமாக மாறியது. இது மேலும் வடகிழக்குப் பகுதிக்கு நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த தாழ்வழுத்த மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்கள் புயல் பாதிப்பால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

அடுத்த செய்தி