ஆப்நகரம்

Asaduddin Owaisi: மதச்சார்பின்மை தோற்று இந்துத்துவா வென்ற தினம் - ஒவைசி கொந்தளிப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா குறித்து அசாதுதின் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Aug 2020, 10:44 am
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்துக்கள் ஒருசாராரின் நீண்ட கால கோரிக்கையான ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுபற்றி அல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி கூறுகையில், ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்றதன் மூலம் தனது பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறியுள்ளார். இது இந்துத்துவா -வின் வெற்றி. மதச்சார்பின்மையின் தோல்வி. சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தின் வெற்றி. கோவில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் இந்து ராஷ்டிராவிற்கும் பிரதமர் அடித்தளம் இட்டுள்ளார்.
Samayam Tamil Asaduddin Owaisi


இது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. நம்பிக்கை என்ற ஒரு விஷயம் வரும் போது மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. இதனை பாஜக திறம்பட செய்துவருகின்றனர்.

புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது - அமித் ஷா

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதிலும், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசு தவறிய நிலையில், தங்கள் அரசியலை அப்படியே வேறுபக்கம் திருப்பிவிட்டனர். இந்நாட்டில் ஏழைகள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?

பிரதமர் மோடி பேசும் போது, தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பதாக கூறினார். அதேபோல் தான் நானும் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறேன். ஏனெனில் நான் குடியுரிமையின் சமத்துவத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.

புதிய இந்தியாவை பற்றி ஆர்.எஸ்.எஸ் பேசுகிறது. பாஜகாவோ நமது நாட்டை இந்து ராஷ்டிராவாக மாற்ற விரும்புகிறது. அதற்கான வேலையை நேற்று தொடங்கிவிட்டனர். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் காங்கிரஸிற்கும் தான் சம பங்குண்டு.

அயோத்தியில் கம்பராமாயண வரிகளை உச்சரித்த பிரதமர் மோடி!!

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவானது யாரெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகமுடிக்குள் மறைந்து கொண்டு இத்தனை காலம் ஏமாற்றி வந்தார்களோ, அவர்கள் எல்லோரையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி