ஆப்நகரம்

ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கொண்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்

Samayam Tamil 5 Apr 2020, 2:41 pm
டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பாக கானொளி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000த்தை தாண்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரசை பரவாமல் தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அரசுடன் துணை நிற்போம் என அறிவித்துள்ள எதிர்க்கட்சிகள், தங்களை ஆலோசிக்காமல் தனிச்சையாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருவதாக சுட்டிக்காட்டுவதுடன், அனைத்து கட்சி கூட்டத்திற்கும் வலியுறுத்தி வந்தன.

மத்திய அரசு இந்த விஷயத்தை மறந்துவிடக் கூடாது; மோடியிடம் வலியுறுத்திய ஸ்டாலின்!

இதனிடையே, கொரோனா மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்திய மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்தொடர்ச்சியாக உள்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், ஏப்ரல் 8ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொளி மூலம் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கொண்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி