ஆப்நகரம்

எல்லையில் ராணுவ வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிரதமர் மோடி!

ஹர்சில்: தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்கள் உடன், பிரதமர் மோடி இன்று கொண்டாடினார்.

Samayam Tamil 7 Nov 2018, 11:48 am
வட மாநிலங்களில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Samayam Tamil Diwali Modi


ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை மோடி கொண்டுள்ளார். நடப்பாண்டிலும் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் உடன் தீபாவளி கொண்டாடினார்.

அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து கேதர்நாத் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார்.

மோடியின் வருகையை ஒட்டி, கேதர்நாத் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2013ல் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீட்டெடுக்கும் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

அதில் கேதர்நாத் செல்லும் பாதை விரிவாக்கம், மலைத்தொடர் வழியே கட்டுமானம், மந்தாகினி மற்றும் சரஸ்வதி நதிகளை ஒட்டிய சுற்றுச்சுவர் கட்டமைப்பு, துறவிகளுக்கு வீடுகள் கட்டுத் தருதல், ஆதி சங்கரருக்கு சமாதி கட்டுதல் உள்ளிட்டவை அடங்கும்.

இன்று மாலை ராணுவ ஜவான்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி