ஆப்நகரம்

விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர் துரைக்கண்ணு - பிரதமர் மோடி இரங்கல்!

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 1 Nov 2020, 4:01 pm
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அக்டோபர் 13ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


இந்த சூழலில் துரைக்கண்ணுவின் நுரையீரலில் தொற்று அதிகரித்தது. இதனால் உடல்நிலை கவலைக்கிடமானது. செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு!

இந்த நிலையில், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு என்று புகழாரம் சூடியுள்ள பிரதமர் மோடி, துரைக்கண்ணுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி