ஆப்நகரம்

புதிய கல்விக் கொள்கை: பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஆளுநர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்களுடனான மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 6 Sep 2020, 10:25 pm
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டே புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனினும், அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, மும்மொழிக் கொள்கைக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


இதனிடையே, புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் அது தொடர்பான கருத்துகளை கேட்க முடிவு செய்த மத்திய அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டுள்ளது. கருத்துக்கள் தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிபுணர்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதியக் கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கும் மாநாடு காணொளிக் காட்சி வாயிலாக நாளை நடைபெறவுள்ளது. அதில், தானும் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

என்னடா இது காஷ்மீருக்கு வந்த சோதனை; விஸ்வரூபம் எடுக்கப் போகும் பிரச்சினை!


இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் அதன் மாற்றத்தக்க தாக்கம் குறித்து நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இந்த மாநாட்டின் விவாதங்கள் இந்தியாவை ஒரு அறிவு மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை பலப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி