ஆப்நகரம்

எல்லோருக்கும் மின்வசதி! மோடியின் பவர் ஃபுல் திட்டம்

தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டை முன்னிட்டு பிரதமா் மோடி நாட்டின் அனைத்து மக்களும் மின்வசதி பெறும் வகையில் டெல்லியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

TOI Contributor 25 Sep 2017, 7:37 pm
தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டை முன்னிட்டு பிரதமா் மோடி நாட்டின் அனைத்து மக்களும் மின்வசதி பெறும் வகையில் டெல்லியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
Samayam Tamil pm modi constitutes economic advisory council bibek debroy to head it
எல்லோருக்கும் மின்வசதி! மோடியின் பவர் ஃபுல் திட்டம்


தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டை முன்னிட்டு, டெல்லியில் அவரது பவனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் பிரதமர் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா யோஜனா திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை அறிவித்துள்ளாா். மேலும் ஏழைமக்களுக்கு கல்வி, மருத்துவ வசதி, தொடர்பு சாதனம் பெறுவதற்கு உதவுதல் உள்ளிட்டவை தொடா்பாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

மோடியின் தனது உரையில், வரும் 2018க்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.16 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா். புதிய திட்டத்தில் ஏழை மக்கள் ரூ.500 செலுத்தி மின்சாரம் பெறலாம். இந்த ரூ.500 ஐ 10 மாத தவணையிலும் செலுத்தி கொள்ளலாம். இதன்படி நாட்டில் மின்சாரம் இல்லாத வீடுகளே இருக்க கூடாது என்பது தான் அரசின் நோக்கம் என்று தொிவித்துள்ளாா். ஏழை மக்கள் பலன் பெறும் வகையிலான திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார கொள்கைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்கு ஒரு குழுவை பிரதமர் மோடி இன்று அமைத்தார். நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக்தேப்ரா தலைமை வகிப்பார் என்றும், இக்குழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோசனைகளை பிரதமரிடம் வழங்கும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்யும்.

அடுத்த செய்தி