ஆப்நகரம்

"ஊரடங்கை நீட்டிக்கலாமா" மோடி, முதல்வர்களுடன் டிஸ்கசன்!

நாட்டில் நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது...

Samayam Tamil 27 Jul 2020, 8:55 am
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அன்லாக் 2 செயல்முறை, ஜூலை 30ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு முறை படிப்படியாகத் தளர்த்தப்படும் என அன்லாக் செயல்முறையை மத்திய அரசு அறிவித்தது. அன்லாக் செயல்முறை 30ஆம் தேதி நிறைவடைய உள்ள சூழலில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

இப்போது வரை நாட்டில் 14 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் ஊரடங்கு தளர்த்துவது என்பது ஆபத்தான விஷயம்தான் என மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் கடந்த 10 நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், “ஊரடங்கை நீட்டிக்க எந்த திட்டமும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். கொரோனா ஊரடங்கு தொடங்கியதிருந்து இதுவரை அனைத்து மாநில முதல்வர்களுடன் 6 முறை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இப்படிப்பட்ட கருத்துகளை ஒருபோதும் பரப்பாதீர்கள் - ’மன் கி பாத்’தில் பிரதமர் மோடி!

6 முறை நடந்த ஆலோசனையில், முதல் 5உம் கொரோனாவுடன் எப்படி சண்டை போடுவது என்பது தொடர்பாகவே விவாதங்கள் நடத்தப்பட்டது. 6வது முறையாக நடந்த ஆலோசனையில் மட்டுமே, ஊரடங்கு தளர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாபவர்களில் 63. 45 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 2. 38 சதவீதமாக உள்ளது.

அடுத்த செய்தி