ஆப்நகரம்

நல்ல வேளை: மோடி சென்ற விமானம் சேஃப்!

பிரதமர் விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதம்... நல்ல வேலை...

Samayam Tamil 21 Sep 2019, 12:56 pm
பிரதமர் விமானம் 2 மணி நேரம் தொழினுட்ப கோளாறு காரணமாகத் தாமதம்.
Samayam Tamil aaasf


அமெரிக்காவில் நடக்கும் ஐநா பொதுச் சபைக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரச் அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்கு, டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியின் விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல் பாதுகாப்பு கருதி வழக்கமாக வெளியிடப்படாது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு டில்லியிலிருந்து புறப்பட்ட மோடி, இங்கிருந்து ஜெர்மனி நாட்டு விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பிரதமர் மோடியை அமெரிக்கா கூட்டி ஒரு விமானம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மோடியின் விமானம் தாமதமானதன் காரணம்...
ஜெமணியில் தரையிறங்கியபின் சிறிது நேரத்தில் அங்கிருந்து அமெரிக்கா புறப்படுவதாக இருந்த பிரதமரின் பயணம் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து நமக்குக் கிடைத்த தகவலின்படி, பிரதமர் புறப்பட வேண்டியிருந்த விமானத்தில் தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கோளாற்றை விமான நிலைய அதிகாரிகள் சரிசெய்ய 2 மணி நேரம் கால தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதமர் சென்ற விமானம் அமெரிக்காவை அடைவது, கணக்கிட்ட நேரத்தைவிட 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை காலதாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

அமெரிக்கா செல்லும் மோடி... திட்டம்...
இந்தியாவில் ஸ்வெட்ச் பாரத் திட்டத்தைக் செயல்படுத்தியக்குகாக பிரதமர் மோடிக்கு, பில்கேட்ஸ் குழுமம் சார்பாகச் சர்வதேச சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
நாளை, ஹலோ மோடி என்ற தலைப்பில் இந்திய வாழ் அமெரிக்கர்கள் 50 ஆயிரம் பேரிடம் பிரதமர் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரெண்ப்பும் பங்கேற்கிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது இதுவே முதல் முறை.
அமெரிக்காவில் அமைந்துள்ள ஐநா கட்டிடத்தின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் பதிக்க, இந்தியா சார்பாக ரூ. 7 கோடி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
சுதந்திரப் போராட்ட தியாகி காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஐநா காந்தியின் தபால் தலை வெளியிடுகிறது.
இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக 45 அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை செய்கிறார்.

அடுத்த செய்தி