ஆப்நகரம்

அயோத்தி வழக்கு... அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!!

அயோத்தி வழக்கு தொடர்பாக யாரும் தேவையில்லாமல், சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தமது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 7 Nov 2019, 12:33 am
தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அயோத்தி வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
Samayam Tamil pmm


நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17 - ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளதால், இவ்வழக்கின் தீர்ப்பு வரும் 13 -ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி, கோராக்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு தற்போதே பலப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் டிசம்பர் 10 -ஆம் தேதி வரை, போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என, தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தி வழக்கில் என்ன ஆனாலும் அமைதி முக்கியம்: இந்து – முஸ்லிம் தலைவர்கள்

இந்த நிலையில், அயோத்தி வழக்கு தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் யாரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது, தமது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளதால், அமைச்சர்கள் அனைவரும் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் விதத்தில் செயல்பட வேண்டும் என்றும், எந்த விதத்திலும் சர்ச்சைகளுக்கு இடம் தரக் கூடாது என்று பிரதமர் மோடி, அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி