ஆப்நகரம்

மோடியை ராமனாகவும்,. நவாஸ் செரீப்பை ராவணனாக சித்தரித்து போஸ்டர்

உத்தர பிரதேசம், வாரணாசியில் ராமனாக மோடியையும், ராவணனாக நவாஸ் செரிபையும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 6 Oct 2016, 3:20 am
லக்னோ : உத்தர பிரதேசம், வாரணாசியில் ராமனாக மோடியையும், ராவணனாக நவாஸ் செரிபையும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil pm modi is ram nawaz sharif ravana on uttar pradesh posters
மோடியை ராமனாகவும்,. நவாஸ் செரீப்பை ராவணனாக சித்தரித்து போஸ்டர்


உரி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை பாராட்டி இந்தியாவில் உள்ளோர் மட்டும் இல்லமல், மற்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தாக்குதலை மறுக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட வேண்டும் என கேட்டிருந்தார். இதனால் பாஜக வினருக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பல பகுதிகளில் ராமாயண புராணத்தில் வரும் ராமனாக மோடியையும்,10 தலை ராவணனாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பையும், அவரின் மகனாக கெஜ்ரிவாலையும் சித்தரித்து முக்கிய வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களை பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவினர் ஒட்டியதாக தெரிகிறது.

அடுத்த செய்தி