ஆப்நகரம்

இருநாடுகள் உறவில் முன்னேற்றம்- அடுத்த வாரம் மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி

இருநாடுகள் நட்புறவில் முன்னேற்றம் காண, பிரதமர் மோடி அடுத்த வாரம் மாலத்தீவுக்கு செல்லவுள்ளார்.

Samayam Tamil 8 Nov 2018, 11:21 am
மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராஹிம் இபு சோலிஹிம் பதவியேற்கவுள்ள நிலையில், அந்த விழாவில் பங்கேற்கபதற்காக இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் மாலத்தீவு செல்லவுள்ளார்.
Samayam Tamil pm-modi
முதன்முறையாக மாலத்தீவுக்கு பயணிக்கும் பிரதமர் மோடி


சீனாவின் ஆதிக்கம் காரணமாக, மாலத்தீவின் அதிபராக இருந்து வந்த அப்துல்லா யாமீன் இந்தியாவை தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.இந்நிலையில் அந்த நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது.

அதில் எதிர்கட்சியாக இருந்த மாலத்தீவு ஜனநாயக கட்சி வெற்றிப்பெற்றது. மாலத்தீவு ஜனநாயக கட்சி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டதாக அறியப்படுகிறது.

அதை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த இப்ராஹிம் சோலிஹ் மாலத்தீவின் புதிய அதிபராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராஹிம் சோலிஹ் பதவியேற்கும் விழா அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த வாரம் மாலத்தீவு செல்லவுள்ளார்.

அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை குறித்து பிரதமர் மோடி, இப்ராஹிம் சோலிஹ் உடன் பேசுவார் என்று தெரிகிறது. மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, ஏற்கனவே பிரதமர் அலுவலக அதிகாரிகள் அந்நாட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி உலகின் பெரும்பாலான நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஆனால் இந்தியாவின் மிக அருகில் இருக்கும் மாலத்தீவுக்கு ஒருமுறை கூட அவர் சென்றது இல்லை. மாலத்தீவு மற்றும் இந்தியா ஆகியவை தெற்காசிய கூட்டமைப்ப்பில் (சார்க்) அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி